இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

X
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை எட்டையாபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் எட்டையாபுரம் அருகே உள்ள வெம்பூர் ராமசாமி புரத்தை சேர்ந்ததுரை (52) என்பவர் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். பின்னர் நேற்று இரவு ஆடுகள் மட்டும் வீடுகளுக்கு திரும்பி வந்தது. துரை வரவில்லை இதனால் அவரது குடும்பத்தினர்கள் அவரை இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் தேடினார்கள் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று மதியம் துரை அங்குள்ள கண்மாய் அருகே உடல் முழுவதும் கரிய நிலையில் பிணமாக கடந்தார். இதனால் இவர் மீது மின்னல் தாக்கியதில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குசென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

