பெண்ணை ஏமாற்றி நகை பறித்த வாலிபர் கைது

பெண்ணை ஏமாற்றி நகை பறித்த வாலிபர் கைது
X
திருமண தகவல் மைய வலைதளத்தில் துணை தேடிய 60 வயது பெண்ணை ஏமாற்றி 4 சவரன் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
திருமண தகவல் மைய வலைதளத்தில் துணை தேடிய 60 வயது பெண்ணை ஏமாற்றி நான்கு சவரன் நகை பறித்த வாலிபரை சித்தோடு போலீசார் கைது செய்தனர். நசியனுார் ராயர்பாளையத்தை சேர்ந்த கணவனை இழந்து தனியே வசிக்கும் 60 வயது பெண். இவர் தனக்கு துணை தேவை என திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இது திருமண தகவல் மைய வலைதளத்தில் வெளியானது. இதனை பார்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த விஸ்வாச குமார் மகன் மனோஜ் குமார் (29). விண்ணப்பித்து உள்ளார்.பின்னர் இருவரும் சில தினங்கள் ஒன்றாக பேசி பழகி உள்ளனர். இச்சூழலை பயன்படுத்தி அப்பெண்ணிடம் இருந்த நான்கு சவரன் தங்க செயினை எடுத்து கொண்டு தலைமறைவானார். அப்பெண் மனோஜ் குமாரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. பின்னர் மனோஜ் குமார் குறித்து விசாரித்த போது, அவர்  இதுபோன்று திருமண தகவல் மைய வலைதளத்தில் இருந்து கணவனால் கைவிடப்பட்டு துணை தேடும் பெண்களை குறி வைத்து பணம், நகையை திருடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.தன் நகையை மனோஜ் குமார் கடந்தாண்டு டிசம்பரில் திருடி சென்றதாக அப்பெண் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப்பதிந்து மனோஜ்குமாரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.மனோஜ் குமார் மீது இதுபோன்று பெண்களை ஏமாற்றி நகை, பணம் திருடியது தொடர்பாக நான்கு வழக்குகள் தமிழகத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் இருப்பது தெரியவந்தது.
Next Story