ஈரோடு மாவட்டம் எஸ் பி அறிவிப்பு

X
ஈரோடு மாவட்டத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். காஷ்மீரில் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகு ஒன்றிய அரசு தீவிரவாத ஒழிப்புக்கு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக பாகிஸ்தான் நாட்டவர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீசார் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பாகிஸ்தான் நாட்டவர் யாரும் வசிக்கவில்லை. அதேபோன்று, சுற்றுலா உள்ளிட்ட பிற காரணங்களுக்காக தங்கி இருக்கவில்லை. மாறாக பங்களாதேஷ் நாட்டினர் தான் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story

