நாமக்கல்லில் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்!
Namakkal King 24x7 |27 April 2025 9:08 PM ISTநாமக்கல் பிரிண்டிங் பிரஸ் சங்க உறுப்பினர்கள் முகாமில் பங்கேற்று கண் புரை,கண் நீர் அழுத்தம்,விழித்திரை பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டு சிகிச்சை பெற்றனர்.
நாமக்கல் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நாமக்கல் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் குடும்பத்தினர் மற்றும் பிரிண்டிங் பிரஸில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.நாமக்கல் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்து முகாமை துவக்கினார். அச்சங்கத்தின் செயலாளர் சஞ்சீவி, பொருளாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் பிரிண்டிங் பிரஸ் சங்க உறுப்பினர்கள் முகாமில் பங்கேற்று கண் புரை, கண் நீர் அழுத்தம், விழித்திரை பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.நாமக்கல் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் கண் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
Next Story


