பி ஆர் பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு

X
நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாயும் கரும்பு ஒரு டன்னிற்கு 4000 ரூபாயும் ஆட்சிக்கு வந்த மறுநாளே தருவதாக திமுக கூறி அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆகியும் அதை வழங்காமல் ஏமாற்றி விட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் குழு தலைவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ரவிக்குமார் தினேஷ் 27-04-2025 நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாயும் கரும்பு ஒரு டன்னிற்கு 4000 ரூபாயும் ஆட்சிக்கு வந்த மறுநாளே தருவதாக திமுக கூறி அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆகியும் அதை வழங்காமல் ஏமாற்றி விட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் குற்றச்சாட்டு................. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில பொதுக்குழு கூட்டம் உதகையில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் பி ஆர் பாண்டியன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பி ஆர் பாண்டியன் தமிழக அரசு விவசாயிகளை அகதிகளாக்கி இருக்கிற தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் ,விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் ,வருகிற மே நான்காம் தேதி நடைபெற உள்ள நான்காம் கட்ட பேச்சு வார்த்தையில் மத்திய அரசு அதற்கான உத்திரவாதம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாயும் கரும்பு டன் ஒன்றிற்கு 4000 ரூபாயும் ஆட்சிக்கு வந்த மறுநாளே தருவதாக திமுக கூறியிருந்தது அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆகியும் அதை வழங்காமல் ஏமாற்றி விட்டனர் .எனவே இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கு தகுந்தார் போல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் கரும்பு ஒரு டன்னிற்கு ஐந்தாயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய சந்தை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், மலைப்பகுதியில் விளையக்கூடிய பூண்டு மற்றும் கேரட்டிற்க்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு உள்ள நிலையில் அதை விளைவிக்கும் இடத்தில் மிக குறைவான விலையே கிடைக்கிறது எனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தோட்டக்கலை பயிர்களுக்கு விலை உத்தரவாத நிர்ணய குழு அமைத்து விளைப் பொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து இந்த விலையை சந்தைப்படுத்தும் இடத்திலும் கண்டிப்புடன் பின்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும் திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை போட்டு நிலத்தை தர மாட்டேன் என்று போராடியவர்களை குண்டர் சட்டத்தில கைது செய்துள்ளனர், விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையே தனது கொள்கையாக திமுக அரசு பின்பற்றுகிறது .விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதில்லை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசு முடங்கிப் போய் இருக்கிறது. இதனால் தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்த பின்னடைவை சந்தித்துள்ளனர்.எனவே வருகிற 2026 தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விவசாயிகள் திகழ்வார்கள், விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில பொதுக்குழு கூட்டம் உதகையில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் பி ஆர் பாண்டியன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பி ஆர் பாண்டியன் தமிழக அரசு விவசாயிகளை அகதிகளாக்கி இருக்கிற தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் ,விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் ,வருகிற மே நான்காம் தேதி நடைபெற உள்ள நான்காம் கட்ட பேச்சு வார்த்தையில் மத்திய அரசு அதற்கான உத்திரவாதம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாயும் கரும்பு டன் ஒன்றிற்கு 4000 ரூபாயும் ஆட்சிக்கு வந்த மறுநாளே தருவதாக திமுக கூறியிருந்தது அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆகியும் அதை வழங்காமல் ஏமாற்றி விட்டனர் .எனவே இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கு தகுந்தார் போல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் கரும்பு ஒரு டன்னிற்கு ஐந்தாயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய சந்தை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், மலைப்பகுதியில் விளையக்கூடிய பூண்டு மற்றும் கேரட்டிற்க்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு உள்ள நிலையில் அதை விளைவிக்கும் இடத்தில் மிக குறைவான விலையே கிடைக்கிறது எனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தோட்டக்கலை பயிர்களுக்கு விலை உத்தரவாத நிர்ணய குழு அமைத்து விளைப் பொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து இந்த விலையை சந்தைப்படுத்தும் இடத்திலும் கண்டிப்புடன் பின்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும் திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை போட்டு நிலத்தை தர மாட்டேன் என்று போராடியவர்களை குண்டர் சட்டத்தில கைது செய்துள்ளனர், விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையே தனது கொள்கையாக திமுக அரசு பின்பற்றுகிறது .விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதில்லை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசு முடங்கிப் போய் இருக்கிறது. இதனால் தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்த பின்னடைவை சந்தித்துள்ளனர்.எனவே வருகிற 2026 தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விவசாயிகள் திகழ்வார்கள், விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story

