உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார்.

உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார்.
X
ஆளுநர் ஆர் என் ரவி
உதகையில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க வெள்ளிக்கிழமை வருகை தந்திருந்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், முத்தநாடு பழங்குடியினர் மந்திற்கு சென்றார், நேற்று குடும்பத்துடன் மசினகுடி யானைகள் வளர்ப்பு முகாமிற்கு சென்று உதகை ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 10.30.மணியளவில் உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார். உதகை ராஜ்பவனில் இருந்து சாலை மார்கமாக உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றார். குடியரசு துணைத் தலைவருடன் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இன்று காலை 8 மணியளவில் கோத்தகிரி வழியாக, சாலை மார்கமாக கோவையைச் சென்றடைந்தார்.
Next Story