ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் காட்டேஜ்கள் மற்றும் ரிசல்ட்டுகளை ஆய்வு செய்ய குழு நியமனம்...

X
ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் காட்டேஜ்கள் மற்றும் ரிசல்ட்டுகளை ஆய்வு செய்ய குழு நியமனம்... ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கோடை விழாவை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் விரும்பி செல்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகள் இன்று இடங்களில் சுற்றிப் பார்த்து ஓர் இரண்டு நாட்கள் தங்கி விடுமுறையை கழிக்கின்றனர். தற்பொழுது உயர்நீதிமன்றம் தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா என்பதை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. தங்கும் விடுதிகளுக்கு ஒரு சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்து வருகிறது. கோடைகாலங்களில் அதிகமான வருமானம் ஈட்டும் ஒரு தொழிலாக உள்ளதால் பல்வேறு முறைகேடுகளும் நடைபெறுவதாக குற்றம் எழுந்துள்ள நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி நகராட்சி ஆணையர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அடங்கிய ஆய்வுக் குழு நியமனம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் குறித்து புகார் தெரிவிக்க பிரத்தியேக தொலைபேசி எண் மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளுக்கு ஆய்வு செய்து மூட உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

