ஆசையாய் வருகிறோம் அவதி படுகிறோம் சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி .......

X
ஆசையாய் வருகிறோம் அவதி படுகிறோம் சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி ....... இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அமைதியான மற்றும் அழகிய நகரமான ஊட்டி, பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்தே ஓய்வு மற்றும் சுற்றுலாவின் சொர்கமாக திகழ்கிறது நீலகிரி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இது, இயற்கை அழகு மற்றும் காலனித்துவ வசீகரத்தின் கலவையாய் உள்ளது தொட்டபெட்டா சிகரம் அதன் மிகவும் பிரமிக்க வைக்கும் ஈர்ப்புகளில் ஒன்றாக அனைவரையும் கவர்கிறது நீலகிரியில் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயங்களில் ஒன்று கடல் மட்டத்திலிருந்து 2,637 மீட்டர் உயரத்தில் உள்ள நீலகிரியின் மிக உயரமான இடமான தொட்டபெட்டா சிகரம் ஆகும். தொட்டபெட்டாவிற்கு வருகை தந்த ஆரம்பகால பார்வையாளர்கள், சுற்றியுள்ள நிலப்பரப்பின் பரந்த காட்சியால்பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இந்த அற்புத சிகரத்தின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தொட்டபெட்டாவின் சரிவுகளை சூழ்ந்துள்ள சோலை காடுகள் பல உள்ளூர் தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு தாயகமாக உள்ளன, இது சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு ஒரு சிறந்த இடமாகஉள்ளது இந்த உயரமான சிகரம் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. அதன் மிக நெருக்கமான போட்டியாக வடக்கே சாமுண்டி சிகரமும் அதன் மேற்கே கட்டாடாடும் ஆகும், இவை இரண்டும் காலநிலை தெளிவான இருந்தால் தெரியும். இங்கிருந்து நீலகிரியின் பெரும்பாலான இடங்களை காணமுடியும். குறிப்பாக, சூரியன் மேற்கில் மறைவதை காண இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம் இப்படிதான் தற்போது சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்தைகாண குவிந்துவருகின்றனர் ஆனால் உரிய நேரத்தில் ஆசையாய் காண வந்த தொட்டபெட்டா சிகரத்தை காணமுடியாமல் அவதியின் உச்சத்தை அடைவதாக பெரும் அதிருப்தி தெரிவிக்கின்றனர் இன்று அதிக அளவில் சுற்றுலாபயணிகள் குவிந்தனர் அவர்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க படாததால் பெரும் அவதி அடைந்தனர் 2 அரசு பேருந்துகளும் 1 வனத்துறை வாகனமும் இயக்க படுகிறது இது போதுமானதாக இல்லாததால் பல மணிநேரம் காத்திருந்து வருபருந்துகளில் முண்டியடித்து ஏறும் நிலையே காணப்படுகிறது குழந்தைகளும் வயதானவர்களும் எப்படி பேருந்தில் முண்டியடித்து ஏறமுடியும் வனத்துறையிடம் கேட்டால் மேலே வாகனம் நிறுத்த இடமில்லை இதனால் கூடுதலாக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என கூறுவதாக போக்குவரத்துறையினர் கூறுகின்றனர் காலைமுதல் மாலைவரை காத்திருந்து தொட்டபெட்டாவை மட்டுமே காண முடிந்ததாகவும் ஊட்டிக்கு ஆசையாய் வந்த நாங்கள் அவதிபடுகிறோம் என சுற்றுலா பயணிகள் பெரும்அதிருப்தி தெரிவிக்கின்றனர் நுழைவுகட்டணம் வசூல்செய்யும் வனத்துறை எங்களுக்கு தேவையான அடிப்படை வசதியும் வாகன நிறுத்தமும் செய்து தரவேண்டும் இல்லை என்றால் தொட்டபெட்டாவுக்கு வராதீர்கள் என அறிவிக்க.வேண்டும் என பெரும் அதிருப்தி தெரிவித்தனர்
Next Story

