மீன் பிடிக்க சென்ற நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
மீன் பிடிக்க சென்ற நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் மோகன்(25). இன்று பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டு, குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மோகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story




