தொடரும் ஆலய ஊழியர்கள் போராட்டம்

X
குமரி மாவட்ட ஆலய ஊழியர் தொடர் போராட்டமானது நான்காவது நாளாக தொடர்கிறது தங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரி குடும்பத்தினருடன் இரவு பகலாக சுசிந்திரம் இந்து அறநிலையதுறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கனகராஜ் வருகை புரிந்தார் பின்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆலய ஊழியர்களுக்கு முழு ஆதரவையும் தெரிவித்தார். வரும் 30 ஆம் தேதி வரை இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் 30 ஆம் தேதிக்கு பிறகு குடும்பத்தோடு குழந்தைகளோடு மிகப் பெரிய போராட்டம் தொடரும் என்றார். கோவில்களில் உள்ள பூஜைகளில் மேளதாளங்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெறுகிறது. எனவே அரசு அதிகாரிகள் இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
Next Story

