கோவை: மாகாளியம்மன் கோவில் சக்தி அழைத்தல் விழா !
கோவை மாவட்டம் வெங்கடேஸ்வரா நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு மாகா கணபதி மற்றும் மாகாளியம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு சக்தி அழைத்தல் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் கம்பத்து ஆட்டம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பாரம்பரிய உடையணிந்து வந்த கலைஞர்களின் கும்மியாட்டம் காண்போரை மெய்மறக்கச் செய்தது. கம்பத்து ஆட்டம் பக்தர்களின் பக்தி உணர்வை மேலும் அதிகரித்தது. விழாவின் தொடக்கமாக, வள்ளி கும்மி ஆசிரியர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. இப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் ஊர் பொதுமக்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இந்த சக்தி அழைத்தல் திருவிழா வெங்கடேஸ்வரா நகரில் பக்தி மற்றும் மகிழ்ச்சி பொங்க நடைபெற்ற ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
Next Story



