கோவை: வெடிகுண்டு மிரட்டல்-மாநகராட்சி ஊழியர் கைது !

கோவை: வெடிகுண்டு மிரட்டல்-மாநகராட்சி ஊழியர் கைது !
X
மாநகராட்சி ஊழியர் ஒருவர், தனது புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்து, மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு.
கோவை மேயர் பங்களாவிற்கு கோவை மாநகராட்சி ஊழியர் ஒருவர், தனது புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்து, மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முந்தினம் இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ஆர்.எஸ். புரத்தில் உள்ள மேயர் பங்களாவில் வெடிகுண்டு இரவு 10 மணிக்கு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று சோதனை செய்ததில், அது புரளி என்பது தெரியவந்தது. விசாரணையில், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஆனந்த் (40) என்பவர் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து சென்ற நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்து அவர் இவ்வாறு செய்ததாக நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனந்த் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story