திருமய: பைக் விபத்தில் டீ மாஸ்டர் பலி!

திருமய: பைக் விபத்தில் டீ மாஸ்டர் பலி!
X
விபத்து செய்திகள்
திருமயம் அருகே உள்ள மளவளான்கரையை சேர்ந்த கணேஷ் 50 டீ மாஸ்டர். இவரது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான அழைப்பி தழை ஆதனூர் கோனாபட்டு பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கு வழங்குவதற்காக நேற்று காலை பைக்கில் சென்றார். அவருடன் உறவினரான கொடிப்பட்டியை சேர்ந்த கணபதி (24) என்பவ ரும் சென்றார் கோனாபட்டு அருகே சென்றபோது சாலையின் குறுக்கே மாடுகள் ஓடியதால், நிலை தடுமாறிய பைக் ஒரு மாட்டின் மீது மோதியது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம டைந்த கணேசன் அதே இடத்தில் உயிரிழந்தார். கணபதி காயத்துடன் திருமயம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story