கோவை: திமுக மக்களுக்கு பக்க பலமாக இருக்கும் - உதயநிதி
தி.மு.க. அரசு எப்போதும் மக்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசினார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த விழாவில், ரூ.82.14 கோடியில் 132 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.29.99 கோடியில் முடிவுற்ற 54 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மகளிர் இலவசப் பேருந்து பயணம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டங்கள் மகளிரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை மாதம் முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழக அரசு அனைத்து மாநிலங்களை விட 9.69% வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வளர்ச்சி மேலும் உயர மக்களின் ஆதரவு தேவை என்று அவர் கூறினார்.
Next Story





