ஐடி ஊழியர் தற்கொலை

ஐடி ஊழியர் தற்கொலை
X
ஈரோட்டில் பரிதாபம் ஐ.டி.ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை போலீசார் விசாரணை
ஈரோடு, வாய்க்கால் மேடு, கரும்பாறை ரோடு, இந்தியன் நகர், முதலாவது வீதியை சேர்ந்தவர் சீராளன். இவரது மகன் பிரவீன் (35). முதுகலை என்ஜினீயரிங் பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை. பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக பிரவீன் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பிரவீன் வாக்கிங் செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் பிரவினை தேடினர். எனினும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இரவில் அதே பகுதியில் கிரிக்கெட் மைதானம் அருகே கிணற்றின் அருகே பிரவீன் காலனி இருந்துள்ளது. இதுகுறித்து அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். சிறிது நேரத்தில் பிரவீன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் பிரவீன் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மன உளைச்சல் காரணமாக பிரவீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story