அமாவாசை முன்னிட்டு சென்னிமலை கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

அமாவாசை முன்னிட்டு சென்னிமலை கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
X
சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.‌ நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர் சித்திரை மாத அமாவாசை பூஜை மற்றும் வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு உள்ளூர், வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்னிமலைக்கு வந்தனர். தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. ஆனால் நேற்று அமாவாசை தினம் என்பதால் நேற்று ஒரு நாள் மட்டும் காலை முதல் மாலை வரை கோவிலுக்கு சொந்தமான 2 பஸ்களும் தொடர்ந்து இயக்கப்பட்டது. மேலும் ஏராளமான பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்றும் சாமி தரிசனம் செய்தனர். இன்று வழக்கம்போல் மலைப்பாதை சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்பதால் இன்று முதல் மீண்டும் தனியார் வாகனங்கள் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story