பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது

X
ஈரோடு மாவட்டம், சிறுவலூர், குப்பாண்டம்பாளையம், அரண்மனை நகர் பகுதியில் ஒரு நபர், பொதுமக்கள் வந்து செல்லும் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டும், மதுபோதையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் வருவதாக சிறுவலூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பொது இடத்தில் மது அருந்திவிட்டு, போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்த சேவுகம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தனபால் (32) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
Next Story

