மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு
X
திருமேனிஏரி கிராமத்தில் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிர் இழந்தார்
மன்னார்குடி அருகே மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமேனிஏரி கிராமத்தை சேர்ந்த ஐயப்பன்,மீனா, தம்பதியரின் 12 வயது மகள் அனுஷ்கா.8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறைவிடப்பட்டதால் இன்று காலை வீட்டில் இருந்த சிறுமி அனுஷ்கா வீட்டின் பின்புறம் இருந்த மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிச்சை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக அனுஷ்கா மீது மின்சாரம் பாய்ந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து அனுஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி அனுஷ்கா உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து திருமக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்ததை அறிந்த அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரைய வைத்தது.
Next Story