கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு: உணவு பாதுகாப்பிலிருந்து விவசாயிகளின் செழிப்பை நோக்கி நகர வேண்டும் - துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் உரை !

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பு செய்த பல்கலைக்கழகத்தில் தாம் இருப்பது ஒரு பேறு. இந்தியா உணவுப் பற்றாக்குறையிலிருந்து உணவு உபரியை நோக்கி நகர்ந்துள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவசாய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மாற்றத்திற்கான பரந்த நோக்கத்திற்கு சேவை செய்துள்ளது. விவசாயிகள் விவசாய நிலங்களோடு மட்டுமல்லமால், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள் வெறும் உற்பத்தியாளராக இருந்து சந்தையை மறந்துவிடக் கூடாது. விவசாயிகள் விவசாய வர்த்தகத்தையும் அறிந்து, அவர்கள் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும். அந்த மனநிலையை உருவாக்குங்கள். இதனால் ஒரு விவசாயி தன்னை உற்பத்தியாளரிலிருந்து மதிப்பு கூட்டுபவராக மாற்றிக்கொண்டு, குறைந்தபட்ச உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சில தொழில்களைத் தொடங்குவார். பண்ணை விளைபொருள் சந்தை என்பது மிகப்பெரியது, பண்ணை விளைபொருட்களுக்கு மதிப்பு சேர்க்கப்படும்போது தொழில் செழிக்கும். விவசாயத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண்மையின் ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தும் 150-க்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்ட வேளாண் அறிவியல் மையங்களையும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலையும் இணைக்க வேண்டும். நாம் உணவுப் பாதுகாப்பு என்ற இடத்திலிருந்து விவசாயிகளின் செழிப்புக்கு நகர வேண்டும். விவசாயி வளமாக இருக்க வேண்டும், இந்தப் பரிணாமம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களிலிருந்து தோன்ற வேண்டும் என்று கூறினார்.
Next Story