திருச்செங்கோடு அறிவு சார் மையத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நகர மன்ற தலைவர் பாராட்டு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சி சார்பாக கடந்த ஆண்டு அறிவு சார் மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அறிவு சார் மையத்தில் டிஎன் பி எஸ் சி குரூப் 2,2A குரூப் IV யு பி எஸ் சி தேர்வுகள் போன்ற பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை இலவசமாக நகராட்சி நிர்வாகம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் குரூப் IV தேர்வு வரும் 12.07.25 அன்று நடைபெற உள்ள சூழ்நிலையில் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுகலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளிடம் பேசியபோது கூறியதாவது. இந்த அறிவு சார் மையத்தில் தினமும் 180க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் படிக்க அனைத்து புத்தகங்களும்வைக்கப்பட்டுள்ளது மேலும் மாணவ மாணவிகள் அமர்ந்து படிக்க தேவையான மேசைகள் சேர்கள் காற்றாடி வசதி குடிநீர் வசதி, கழிவறை வசதி உணவருந்த தேவையான வசதிகள்செய்து கொடுக்கப் பட்டுள்ளது.கடந்த ஆண்டு இங்கு பயிற்சி பெற்றவர்கள் 18 பேர் பல்வேறு தேர்வுகளில் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த அறிவு சார் மையத்தை பயன்படுத்திக் கொண்டு மாணவ மாணவிகள் முன்னேற வேண்டும். இந்த அறிவு சார் மையத்தை கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்என கூறினார். தொடர்ந்து இங்கு பயிலும் மாணவ மாணவிகள் தங்கள் பயிலும் இடத்தில் கூடுதலாக மின்விசிறி தேவை கேட்டுக் கொண்டனர். நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு உடனடியாக இரண்டு புதிய மின்விசிறிகளை வழங்கினார். இந்த அறிவு சார் மையத்தில் கடந்த ஓராண்டாக குரூப் 2 , 2 A , குரூப் 4 ரயில்வே துறை தேர்வுகள் ஆகியவற்றில் 18 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் முருகன்கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அறிவுசார்மைய கண்காணிப்பாளரிடம் அறிவு சார் மையத்திற்கு தேவைப்படும் கூடுதலான வசதிகள் என்ன என்பதை உடனடியாக தெரிவிக்குமாறு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அறிவுறுத்தினார்.
Next Story



