தா.பழூரில் மாட்டு வண்டி தொழிலாளர் நல சங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தா.பழூரில் மாட்டு வண்டி தொழிலாளர் நல சங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X
தா.பழூரில் மாட்டு வண்டி தொழிலாளர் நல சங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.அரியலூர் ஏப். 28- அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மாட்டுவண்டி ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் மணல் குவாரி அமைத்து தர வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் அரியலூர் திருச்சி மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டி ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இந்த கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அரியலூர், திருச்சி, தஞ்சை மாவட்ட பகுதிகளில் கொள்ளிட ஆறு மற்றும் வெள்ளாற்று பகுதிகளில் 11 இடங்களில் மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வாழைக்குறிச்சி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி காலம் இன்னும் 5 மாதவ் உள்ள நிலையில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். இடங்கண்ணி அன்னகாரன்பேட்டை கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைப்பதற்கு பரிசீலினை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பேசினர். மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கப்படாத பட்சத்தில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய வகையில் போராட்டத்தை கையில் எடுப்போம்.அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து அதன் ஆலோசனையின் பேரில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்துவோம் என எச்சரிக்கை செய்தனர்.தஞ்சை மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் திருச்சி ஞானசேகரன், பாபநாசம் கரிகாலன், திருவையாறு சுதாகர், அசாவீரன்குடிகாடு மோகன், திருப்பனந்தாள் கலியமூர்த்தி , பிலிச்சிகுழி சின்னதுரை ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டு கண்ட உரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக வினோத் நன்றி கூறினார்.இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story