மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ட்ரோன் இயக்க வனத்துறை தடை!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ட்ரோன் இயக்க வனத்துறை தடை!
X
கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ட்ரோன்கள் இயக்க வனத்துறையினர் முழுமையாகத் தடை விதித்துள்ளனர்.
கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ட்ரோன்கள் இயக்க வனத்துறையினர் முழுமையாகத் தடை விதித்துள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு, முண்டந்துறை, முதுமலை போன்ற சுற்றுலாத் தலங்களில் ட்ரோன் பயன்பாட்டை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மோகத்தால் சிலர் வனப்பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு வீடியோ எடுப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக தங்கும் விடுதிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைப்பாதைகளில் ட்ரோன் மூலம் வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன. இதையடுத்து வனத்துறையினர் கூறுகையில், தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளான அணைகள், நீர்வீழ்ச்சிகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களில் ட்ரோன் இயக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், ட்ரோன்களும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். துறை ரீதியான அதிகாரிகள் இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story