பள்ளி நிர்வாகத்தில் ஒத்துழைப்பால் அதிக மதிப்பெண் பெற்றோம்- மாணவிகள் பேட்டி.
பள்ளி நிர்வாகத்தில் ஒத்துழைப்பால் அதிக மதிப்பெண் பெற்றோம்- மாணவிகள் பேட்டி. நடந்து முடிந்த சிபிஎஸ்சி பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் கரூரில் செயல்படும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் இனியா, தன்விகா ஆகியோர் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர். இவர்களை கௌரவிக்கும் வகையில் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாணவிகள், பத்தாம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக கடுமையாக உழைத்தோம், அதேசமயம் எங்களது உழைப்பை அங்கீகரித்து, ஒருங்கிணைத்து தேவையான சந்தேகங்களை தீர்த்து வைத்து, அதிகப்படியான மதிப்பெண் பெறுவதற்கு பள்ளி நிர்வாகம் பெருமளவில் ஒத்துழைத்தது. பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பால் தான் நாங்கள் இந்த மதிப்பெண்ணை பெற முடிந்தது. எனவே பள்ளி நிர்வாகத்திற்கும், எங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினர்.
Next Story



