அரியலூர் அருகே பிறந்த நாள் கேக் வெட்டிய தகராறு மூன்று பேர் கைது.

X
அரியலூர், மே.15- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (36) இவர் கழுவந்தோண்டி பைபாஸ் சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் முகிலன் (20) என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாட அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மணிமாறன் (20), கரடிகுளம் ராஜ்குமார் என்பவரது மகன் இளமாறன்(20) 2 பேரும் முகிலனுக்கு பிறந்தநாள் கொண்டாடும் வகையில் பிறந்தநாள் கேக்கை சாலையில் வைத்து வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது அப்போது அவ்வழியாக வந்த விஜயகுமாரை வழிமரித்து தகராறு செய்ததாகவும் தகராறு முற்றிய நிலையில் மூன்று பேரும் சேர்ந்து திட்டி தாக்கியும் ,அருகில் கிடந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.இதில் தலையில் காயம் அடைந்த விஜயகுமார் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் முகிலன், மணிமாறன், இளமாறன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story

