அரியலூர் அருகே வீடுகளுக்கு அதிக அளவு மின்சாரம் வந்ததால் ஃபேன், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுது: பொதுமக்கள் சோகம்.*

X
அரியலூர்,14- அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம் தேளூர் மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சிக்குட்பட்ட வள்ளக்குளம் கிராமத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட அதிகபடியான மின்சாரத்தின் காரணமாக ஊர் முழுவதும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அதிகப்படியான மின்சாரம் பாய்ந்துள்ளது.இதனால் அனைத்து வீடுகளிலும் டிவி, ப்ரிட்ஜ், மின்விசிறி, லைட் உள்ளிட்ட அனைத்து மின்சார சாதனங்களும் பழுது ஏற்பட்டது. இரவு நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. டிவி, ஃபேன், பிரிட்ஜ் ஆகிய மின்சார சாதனங்கள் பழுதடைந்து அதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் தீய்ந்த வாசம் ஆகியவற்றால் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த மக்கள் வீடுகளில் பழுதடைந்த பொருள்களை பார்த்து அச்சத்தில் ஆழ்ந்தனர். நல்ல வேலையாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கிராமம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் அனைத்து பேன்களும் பழுதடைந்ததாகவும், பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சார சாதனங்கள் பழுதடைந்தால் அனைவருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே தங்களது இழப்பீடுகளை ஆய்வு செய்து தமிழகஅரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மின்சாரத் துறையினர் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

