ஆண்டிமடம் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் மகனின் திருவுருவப் படம் திறப்பு. சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை.

X
அரியலூர், மே.15- ஆண்டிமடம் சிபிஎம் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் காசிநாதன் மகன் மறைந்த லெனின் திருவுருவ படத்தை சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் சிபிஎம் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்.காசிநாதனின்மகன் லெனின் என்பவர் சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் திருவுருவ படத்தை சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் திறந்து வைத்து மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எம்.வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, முருகன், சரஸ்வதி மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .
Next Story

