சங்கரன்கோவிலில் எம்,பி கனிமொழி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்

சங்கரன்கோவிலில் எம்,பி கனிமொழி நீர் மோர்  பந்தலை திறந்து வைத்தார்
X
எம்,பி கனிமொழி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தென்காசி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி பலன்தரும் மரங்களை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து ராஜபாளையம் சாலையில் தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நீர் மோர் பந்தல்-ஐ திறந்து வைத்த கனிமொழி எம்.பி., பொதுமக்களுக்கு நீர், மோர், பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்பித்தார்.. இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ராணி ஸ்ரீ குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story