சங்கரன் கோவிலில் திமுக மகளிர் தொண்டரணி பாசறைக்கூட்டம்

சங்கரன் கோவிலில் திமுக மகளிர் தொண்டரணி பாசறைக்கூட்டம்
X
திமுக மகளிர் தொண்டரணி பாசறைக்கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி பாசறைக் கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அண்ணாமலை, தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் செல்வி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ண லீலா உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணி தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story