ராயக்கோட்டை: முதியவர்களை தாக்கி பணம், நகை கொள்ளை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள தொட்ட மெட்டரை கிராமத்தில் குத்தகை நிலம் எடுத்து விவசாயம் செய்து வருபவர்கள் ராஜா (60) கோவிந்தம்மாள் (50) இவர்களும் இவரது மருமகன் ராமச்சந்திரன் மற்றும் பேத்தி வர்ஷினி ஆகியோர் தோட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்தபோது இரவு நேரத்தில் வந்த மர்மநபர்கள் அனைவரையும் தாக்கி ரூ. 3.60 லட்சம் பணம் 8.5 பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

