காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதி ஆறு பேர் படுகாயம்

X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள திட்டுப்பாறை பாரவலசு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 6 படுகாயம் அடைந்து உள்ளனர் . காங்கேயம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்த வாட்சன் 43,பிரபு 47, வேணுகோபால்,ஆகாஷ் 12, ஜெய்சிதா 14,நிகரிகா 12, ஆகியோர் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு கோவிலுக்கு இன்னோவா காரில் சென்றுவிட்டு பின்னர் பழனி வழியாக மாண்டியா திரும்பி சென்று கொண்டிருந்தனர். காங்கேயம் திட்டுப்பாறை அடுத்துள்ள பாரவலசு என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் உள்ளே இருந்தவர்களில் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கும்,தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை காரை உடைத்து காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர் . காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி ஊருக்கு போகும் வழியில் மரத்தில் கார் மோதி குழந்தைகள் உட்பட 6 நபர்கள் காயம் அடைந்தது குறித்து காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

