மதுரையில் பெய்த ஆலங்கட்டி மழையால் விருதுநகரில் வட்டமடித்த விமானம்....

X
மதுரையில் பெய்த ஆலங்கட்டி மழையால் விருதுநகரில் வட்டமடித்த விமானம்.... மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஹைதராபாத்திலிருந்து மதுரை விமான நிலையம் வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் தரையிறக்க முடியாமல் விருதுநகர் சுற்றுவட்டார பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்தது. இதனால் விமான பயணிகள் தவித்தனர். மேலும் விருதுநகரில் விமானம் வட்டமடித்ததால் மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து மழையளவு முற்றிலும் குறைந்ததை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் விமானம் தரையிரக்கப்பட்டது.
Next Story

