ஜெயங்கொண்டம் நகராட்சி சாதாரண பொதுக்கூட்டம்

X
அரியலூர், மே.15- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சாதாரண குழு கூட்டம் நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மன்ற பொருளை நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி வாசித்தார்.இதில் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21 வார்டுகளிலும் குடிநீர் மின்விளக்குகள் தெரு விளக்குகள் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கையை முன் வைத்து பேசினர்.
Next Story

