மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் முன்னிலையில் இக்குழுவின் தலைவரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம்தாகூர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும், தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம், திட்ட செயல்பாடு களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம், டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆலோசனைகள் வழங்கினார். மேலும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி மாணிக்கம் தாகூர்,விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை படுகொலை செய்யும் அளவிற்கு மத்திய அரசு செயல் படுகிறது என்றும் 2022-23 நிதி ஆண்டில் 2 கோடி பணி நாட்கள் வேலையும்,,2023-24 ல்,அது 1 கோடியே 48 லட்சமாகவும்,கடந்த நிதியாண்டு அது 98 லட்சமாகவும் நடப்பாண்டு 55 லட்சமாக குறைந்துள்ளது,ஆக கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடி என்பது 55 லட்சமாக குறைத்திருப்பதன் மூலம் மத்திய அரசு சதி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் விவசாயம் இல்லாமல் மற்ற பணிகளை மட்டுமே நம்பியிருக்கும் விருதுநகர் மாவட்ட ஏழை மக்களின் வயிற்றிலே அடிப்பதாக தான் கருதுவதாகவும் இதனால் வேலையில்லாத தாய்மார்களின் எண்ணிக்கை உயரும் எனவும் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை தத்தெடுத்து பராமரித்து வெள்ளை அடித்தல் மற்றும் ரிப்பேர் வேலை செய்தல் போன்ற சீரமைப்பு பணிகளை லயன்ஸ், ரோட்டரி மற்றும் JCS போன்ற தன்னார்வ அமைப்புகளை வரவேற்பதாகவும், அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அல்லது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு எந்த விதத்தில் உதவ முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும் உதவும் அவர்களுக்கு மாவட்ட அளவிலான விருதுகளை சுதந்திர தினத்தன்று ஆட்சியர் வழங்குவார் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அரசியலமைப்பு சட்டத்தின் உள்ள பிரிவுகளையும் அமைப்புகளையும் உடைக்கும் தகர்க்கின்ற மோடி அரசின் முயற்சி தொடர்கிறது எனவும் தற்போது குடியரசு தலைவரையும் அரசியலமைப்பை தகர்க்கின்ற பணியிலும் ஈடுபடுத்தி இருக்கிறார் கள் என விமர்சனம் செய்தார். மேலும் ஆளுநர் ஆர்.என். ரவி உட்பட பல ஆளுநர்கள் பாஜகவின் உறுப்பினர்கள் போல் செயல்பட்டு வருவதை தடுத்து நிறுத்துகின்ற விதத்திலே உச்ச நீதிமன்றம் மிக கடுமையான விதிகளை அறிவித்து அரசியல் சாசனத்தை காப்பாற்றியது எனவும் குடியரசு தலைவரே ஒரு அரசியல் கட்சியினர் போல் செயல் பட வைத்து இருப்பது என்பது கண்டிக்கத்தக்கது எனவும் அரசியல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார். மேலும் ஆப்ரேஷன் சிந்தூருக்கு பின்னர் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை 10% அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதில் அளித்த எம்.பி மாணிக்கம் தாகூர் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்ட தாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு பிறகு பாஜகவில் உட்கட்சி பிரச்சனை வந்து உள்ளது என்றார். மேலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாட்டு பாடுவதில் பிஸியாக உள்ளார் என விமர்சனம் செய்த மாணிக்கம் தாகூர் பாஜக தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளாத கட்சி தான் எனவும் பாஜக தமிழகத்தில் எப்போதும் மிஸ்டு காலாக மட்டுமே தான் இருக்கும் என்றார். மேலும் காங்கிரஸ் கட்சியோடு முரண்பாடு இருந்தாலும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதாலேயே திமுக கூட்டணியில் விசிக இருப்பதாக திருமாவளவன் தெரிவித்த கருத்து பதில் அளித்த எம்பி மாணிக்கம் தாகூர் விசிக தலைவர் திருமாவளவனுக்கு உரிய மரியாதையும் உரிய இடமும் கொடுத்து இந்தியா கூட்டணியில் முக்கியமான தலைவராக உருவாகி வருகிறார் என்றார். மேலும் பாஜக ஆர் எஸ் எஸ் கொள்கைக்கு எதிராக நிரந்தரமான நிலைப்பாட்டை எடுத்தவர் விசிக தலைவர் திருமாவளவன் என்றார். விசிக தலைவர் திருமாவளவன் கொள்கை பிடிப்பும் ஆர்எஸ்எஸ், கோட்சே எதிர்ப்பும் இந்தியா கூட்டணியில் மிக முக்கியமான தலைவராக விளங்குகிறார் என்றார்.
Next Story

