ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மலைமாடுவை மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிரமப்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மலைமாடுவை மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிரமப்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் தனி நபருக்கு சொந்தமான இடம் உள்ளது அதில் முட்செடி கொடிகள் அடர்ந்த யாரும் பயன்படுத்த முடியாத தண்ணீருடன் கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 100 க்கும் மேற்பட்ட மலை மாடுகளை மேய்ப்பதற்காக திருப்பதி என்பவர் மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். எதிர்பாராத விதமாக மேய்சலுக்கு சென்ற மலை மாடு ஒன்று கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்து மூழ்கும் நிலையில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த திருப்பதி ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி மலைமாடுவின் மீது கயிறு கட்டி ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பத்திரமாக மீட்டனர். மலை மாடு கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றவர்களிடத்தில் அனுமதி இன்றி மாடு மேய்ப்பவர்கள் மீதும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வாய் பேச முடியாத ஜீவன்களை வைத்து பிழைப்பு நடத்தி வரும் நபர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த விடியா திமுக ஸ்டாலின் அரசு முன் வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது..
Next Story

