ஜெயங்கொண்டம் அருகே இளநீ வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் கைது.

X
அரியலூர், மே.15- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகரைச் சார்ந்த ரமேஷ் (எ)ரஜினி(50) இவர் பஸ் நிலையத்தில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு சென்ற ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பாஸ்கர் என்பவரது மகன் வசீகரன் (23) கத்தியை காட்டி மிரட்டி 600 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் என்கின்ற ரஜினி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வசீகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..
Next Story

