ஆண்டிமடம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

X
அரியலூர், மே15- அரியலூர் மாவட்டத்தில் 16.05.2025 தேதி ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் விளந்தை ஊராட்சிக்குட்பட்ட விளந்தை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் தண்டலை ஊராட்சிக்குட்பட்ட தண்டலை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திலும், உட்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட உட்கோட்டை சமுதாயநல கூடத்திலும், முத்துசேர்வாமடம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் மற்றும் பிள்ளைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திலும், 5 மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சி துவக்க விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 30 நாட்களில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Next Story

