கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு

X
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி கடந்த 21 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் தடகளம், வாலிபால், கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் 12 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் 450 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு காலை, மாலை இருவேளை பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா வழிகாட்டுதலின் பேரில் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு காலையில் பால், முட்டை, சிறு பயிறு, பிஸ்கட் வழங்கப்பட்டது. பயிற்சி நேற்று நிறைவடைந்தது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 450 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அதிகாரி வினு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து பயிற்சியாளர்கள், விளையாட்டு மைதான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

