வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி தொழிலாளி படுகாயம்.

வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி தொழிலாளி படுகாயம்.
X
வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி தொழிலாளி படுகாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (25) கூலி தொழிலாளியான. இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு கனமனுப்பள்ளியிலிருந்து. நேரலகிரி பகுதிக்கு சாலையில் நடந்து சென்றபோது அங்கு புதரில் இருந்த ஒற்றை காட்டு யானை திடீரென சாலைக்கு வந்து முருகேசனை தாக்கி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் யானை தாக்கியதில் கட்டிட மேஸ்திரி இறந்த நிலையில் தற்போது யானை தாக்கி ஒருவர் காயம் அடைந்து இருப்பது அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story