கிருஷ்ணகிரி: சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் சேச அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் அப்துல்குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையின குழு உறுப்பினர்கள் ஹாமில்டன் வில்சன், ஸ்வர்னராஜ், நாகூர் ஏ.எச்.நஜ்முதீன், பிரவின்குமார் தாட்வியா, ராஜேந்திர பிரசாத்,எம்.ரமீட் கபூர், ஜே.முகம்மது ரபி, எஸ்.வசந்த், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைகுறள், சிறுபான்மையினர் நலத்துறை துணை இயக்குநர் எஸ்.ஷர்மிளி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

