திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம்

X
திண்டுக்கல் மாவட்டம் அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே இந்தி எதிர்ப்பு, தொகுதி மறு வரையறை மற்றும் கல்விக்கு நிதி புறக்கணிப்பு ஆகியவற்றை கண்டித்து திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஐ பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சி நடைபெறுகிறது. குறிப்பாக பெண் சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடியல் பயணம், கல்லூரி மாணவியருக்கு உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, முதியோர்களுக்கான நிவாரணத்தொகை, உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். அதற்கான சிறப்பு முகாம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் 8 ஆண்டுகளில் 8 லட்சம் கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிஏற்பார் என்றார்.
Next Story

