அய்யா வைகுண்டர் உதயதின விளையாட்டு போட்டி

அய்யா வைகுண்டர் உதயதின விளையாட்டு போட்டி
X
எம் பி துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு தலைமைப்பதி வளாகத்தில் அய்யா வைகுண்டரின் 193வது உதய தினவிழாவினை முன்னிட்டு நேற்று அய்யா வைகுண்டர் கிளப் நிறுவனர் மற்றும் தலைவர் குரு. பால ஜனாதிபதி தலைமையில் அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 4வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியினை துவக்கி வைக்க வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்துக்கு ஜெண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் ஒவ்வொரு வீரர்கள் மூலம் பரிசு கோப்பையை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து டாஸ் போட்டு, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து முதல் சர்வீஸ் அடித்து துவக்கி வைத்தார். நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் சினிவாசன், அரோக்கியராஜன், டேனியல், விஜயகுமார், தங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story