வாணியம்பாடி அருகே கார் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே   கார் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு
X
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி கார் மீது லாரி மோதி விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி கார் மீது லாரி மோதி விபத்து ஓட்டுநர் பயிற்சி பெற வந்த பெண் உயிரிழப்பு 4 மாணவிகள் படுகாயம்* திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடியில் உள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இருந்து 5 மாணவிகளுக்கு தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் ஆசிரியர் சுகந்தி என்பவர் கார் ஓட்டுவது குறித்து பயிற்சி அளிப்பதற்காக 5 மாணவிகளுடன் காரில் வாணியம்பாடியில் இருந்து பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிரிசமுத்திரம் பகுதி வரை காரில் சென்றுள்ளார், அப்பொழுது காரை ஓட்டுநர் பயிற்சிக்கு வந்த பெண் ஓட்டி வந்த நிலையில், கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள வளைவில் பயிற்சி காரை ஓட்டி வந்த பெண் காரை திருப்ப முயன்று, சாலை நடுவேவிலேயே காரை நிறுத்தியுள்ளார் அப்பொழுது , அதே சாலையில் கரூரில் இருந்து ஆம்பூருக்கு சிமென்ட் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி, சாலை நடுவே நின்ற கார் மீது மோதியுள்ளது.. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவிகளை உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர், மருத்துவமனையில் ஓட்டுநர் பயிற்சி பெற வந்த நபியா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 4 மாணவிகளை மருத்துவர்கள் மேல்சிகிச்சையிற்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Next Story