அம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் தற்காலிக பணியிடம் நீகம்

X
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே பாலாற்று மணலை கொள்ளையடித்து பாலம் கட்டியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தியதாக உதவி காவல் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூபாய் 27 கோடி திட்ட மதிப்பீட்டில் பாலாறு உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்காக கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் பூமி பூஜை செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் பாலாற்றில் இருந்து பள்ளம் தோண்டும் பொழுது எடுக்கப்பட்ட மணல் மலைபோல் ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வாறாக பாலாற்றில் குவித்து வைத்திருந்த மணலை மணல் கொள்ளையர்கள் ஒப்பந்ததாரர்களும் கூட்டுசேர்ந்து மணலை இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் ஆற்று மணலை திருடுவதாக ஊர் மக்கள் தொடர்பு புகார் தெரிவித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு எச்சரித்து வந்தனர். இதனை பொருட்படுத்தாமல் பாலாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளையடிக்கப்பட்டு வந்ததும் மேலும் முறைகேடாக பாலாற்றில் இருந்து மணலை கொள்ளையடித்து பாலம் கட்டு பணிக்காக பயன்படுத்தியதாகவும் அம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் அளித்த புகாரின் பேரில் நேற்று அம்பலூர் காவல்துறையினர் ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்தும், ஒப்பந்ததாரர் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்தும் அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் ஏற்கனவே அம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் கடந்த 18.02.2025 அன்று பாலாற்றில், பாலம் கட்டுவதற்காக மணல் கொள்ளையடிக்கப்படுவதாக அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், மேலும் மணல் கொள்ளை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்காத அம்பலூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கண்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா இன்று உத்தரவிட்டுள்ளார்.
Next Story

