நாகர்கோவிலில் அதிமுக மாரத்தான் போட்டி

X
இந்தியாவிற்காக எல்லையில் போராடி வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு அதிமுக சார்பில் இன்று மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. சுமார் 5.7 கிலோமீட்டர் மாரத்தான் போட்டிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அக்க்ஷயா கண்ணன் தலைமை வகித்தார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளம் பேர் பங்கேற்றனர்.
Next Story

