அழகர் கோவில் சென்றடைந்த கள்ளழகர்

அழகர் கோவில் சென்றடைந்த கள்ளழகர்
X
மதுரை சித்திரை திருவிழாவில் மதுரைக்கு வந்த கள்ளழகர் இன்று அதிகாலை அழகர் கோவில் சென்றடைந்தார்.
மதுரையில் சித்திரை திருவிழா முன்னிட்டு அழகர் கோவில் உள்ள கள்ளழகர் கடந்த 10ம் தேதி மாலை 6 மணி அளவில் மதுரையை நோக்கி புறப்பட்டார். 12ம் தேதி காலை 6 மணி அளவில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு வண்டியூர் சென்று மறுநாள் 13 ம்தேதி மதியம் மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து இரவு ராமா ராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்த்திய பின்பு நேற்று முன்தினம் 14ம்தேதி இரவு தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் எதிரே உள்ள மைசூர் ராஜா மண்டபத்தில் தங்கி அதிகாலையில் பூப்பல்லாக்கில் எழுந்தருளி கருப்பண்ணசாமியிடம்உத்தரவு பெற்ற பின்பு நேற்று 15 ம்தேதி காலை அழகர் கோவில் நோக்கி புறப்பட்டார். இன்று (மே.16) அதிகாலை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாஹிபா ஸ்ரீமத் முத்து விஜயரகுநாத கௌரி வல்லப டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மறவர் மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் சென்று அடைந்தார். கள்ளழகருடன் அழகர் கோவில் வரை ஏராளமான பக்தர்கள் உடன் சென்றனர்.
Next Story