கோவை: கேட்டில் சிக்கிய நாய்க்குட்டி மீட்பு!

X
கோவை, சிங்காநல்லூர் அருகே நஞ்சப்பாநகரில் நேற்று வீட்டின் கேட்டில் தலையை விட்டு சிக்கிய நாய்க்குட்டியை பீளமேடு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பாரதி என்பவரது வீட்டின் கேட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தவித்த நாய்க்குட்டியை, பொதுமக்கள் உணவு அளித்து அமைதிப்படுத்த முயன்றும் பயத்தின் காரணமாக மீட்க முடியவில்லை. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வீரர்கள், பொறுமையாக செயல்பட்டு நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டனர். தாயிடம் மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்ற நாய்க்குட்டியை பொதுமக்கள் பாசத்துடன் வழியனுப்பினர். தீயணைப்பு வீரர்களின் மனிதாபிமானமிக்க இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
Next Story

