சேலம் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில்

சேலம் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில்
X
தடய அறிவியல் துறை மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட விம்ஸ் வளாகத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியை சேர்ந்த தடய அறிவியல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு துறை ரீதியான திறனை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சார்பில் உடற்கூறு குறித்த பயிற்சியை 2 நாட்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் ஆலோசனையின் பேரில், கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி, தடய அறிவியல் தொழில்நுட்ப மாணவர்கள் உடற்கூறு ஆய்வு பயிற்சியில் பங்கேற்றனர். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு, எவ்வாறு உடற்கூறு ஆய்வு செய்யப்படுகிறது? மற்றும் கொலை, தற்கொலை உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்படும் மரணங்களில் உடற்கூறு ஆய்வின் மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி அவர்களுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும் வழி வகுக்கிறது என்று இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த கல்லூரி தடய அறிவியல் துறையின் பொறுப்பாளர் மோகன் மற்றும் உதவி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
Next Story