ஒரேமாதிரியான மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

X
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனவெளியாகி உள்ள நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கக்கூடிய ஸ்ரீ சாரதா வித்யா வனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையர்கள் (மாணவிகள்) ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மாயா ஸ்ரீ - 475 மதிப்பெண், மகா ஸ்ரீ - 475 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து பாடங்களில் மதிப்பெண்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒட்டுமொத்தமான மதிப்பெண் இருவரும் ஒரே மதிப்பெண் ஆக 475 ஐ பெற்றுள்ளனர். இந்த இரட்டையர்கள் மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

