கோவை: சிங்காநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் !

X
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் 61-வது வார்டில் போயர் வீதியில், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகள் இன்று அகற்றப்பட்டன. மேலும், சாக்கடை கால்வாயின் மீது கட்டப்பட்டிருந்த கட்டிடங்களாலும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, சுகாதாரப் பாதிப்பு ஏற்பட்டதாக மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, மாநகராட்சி உதவி ஆணையர் புவனேஸ்வரி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில், 8 வீடுகள், 2 கடைகள் மற்றும் ஒரு பால் விற்பனை நிலையம் ஆகியவை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அப்போது அங்கு வந்த சிலர், தங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 4 அடி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன என்றும், சில கட்டிடங்களின் தூண்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்ததால் அவை உடனடியாக அகற்றப்பட்டன என்றும் தெரிவித்தனர். பாரபட்சத்துடன் செயல்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story

