தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பள்ளிகள் முதலிடம் பிடித்து சாதனை தாளாளர் பாராட்டு

தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பள்ளிகள் முதலிடம் பிடித்து சாதனை தாளாளர் பாராட்டு
X
16 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பள்ளியில் முதலிடமும் மாவட்டத்தில் 4-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.மாணவியை தாளாளர் உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
அரியலூர் மே:17 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் தேர்வு எழுதிய மாணவி அபிநயா என்பவர் 500-க்கு 494 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும்ம், மாவட்டத்தில் நான்காவது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் பள்ளியில் பயின்ற 50% மாணவர்கள் 500-க்கு 450  மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மாணவி அபிநயா மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அனைவரையும் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன், மற்றும் முதல்வர், துணை முதல்வர், சிபி எஸ் இ பள்ளி முதல்வர், மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து நல்ல பழக்கவழக்கங்களையும், பள்ளிக்கு நேரம் தவறாமல் மாணவர்கள் வருகையையும்,  நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர் கொண்டு பாடம் கற்பிப்பதாகம், மாணவர்களுக்கு அவ்வப்போது ஏழும் சந்தேகங்களுக்கு உடனடியாக சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாகவும், மாணவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், பெற்றோர்களும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை பாராட்டி  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story